தமிழில் பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்தவர் வி. ஆர் ராஜேஷ். இவர் தற்போது சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தற்போது படத் தயாரிப்பாளராகவும் யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை எஸ்பி ராஜ்குமார் இயக்குகிறார். இன்னும் இந்த படத்திற்கு தலைப்பு வைக்கவில்லை.
தயாரிப்பாளரான இவர் தான் இசையமைத்த படங்களின் மூலம் கிடைத்த பணத்தில் 3500 மேடை இசை கலைஞர்களுக்கு உதவி செய்துள்ளார். சகித்துக் கொண்டால் வாழ்க்கை வசப்படும். பொறுமை இழந்து கண் சிவந்து கேள்வி கேட்டால் அப்போதுதான் பிரச்சினை உருவாகும். அப்படி ஒரு கட்டத்தில் தான் நாம் எல்லோரும் தாண்டி வந்து இருப்போம் என தயாரிப்பாளர் வி ஆர் ராஜேஷ் கூறியுள்ளார். என் தயாரிப்பில் வரும் படம் சமூகம் குடும்பம் என அனைத்து தரப்பினருக்கும் உணர்வுகளை புரிய வைக்கும் படமாக இருக்கும் என கூறியுள்ளார்.
