கோலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி காமெடி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர்தான் யோகி பாபு. சின்னத்திரை மூலம் அறிமுகமான இவர் தனது காமெடி மூலம் வெள்ளி திரையில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி இருக்கிறார். இவர் வெறும் காமெடியனாக மட்டுமின்றி ஹீரோவாகவும் பல படங்களில் கலக்கி வருகிறார்.
தற்போது அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு அமீர் நடிப்பில் வெளியான யோகி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் தனது பயணத்தை ஆரம்பித்தார். தற்போது சினிமா துறையில் 13 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறார். இதனைப் பற்றி நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை யோகி பாபு வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர், சினிமாவிற்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய அமீர் மற்றும் இயக்குனர் சுப்ரமணிய ஆகிய இருவருக்கும் நன்றி. அதேபோன்று சினிமாவிற்கு முன்பு 6 ஆண்டுகள் சின்னத்திரையில் பணியாற்றியுள்ளேன். எனக்கு உறுதுணையாக இருந்த ராம்பாலாவிற்கு நன்றி. விரைவில் பிரபாஸ் படத்திலும் நடிக்கவுள்ளேன். திரையுலகில் என்னுடைய வளர்ச்சி காரணமான திரைத்துறையினர், ரசிகர்கள், ஊடகத்தினர் என அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். மேலும் இவரது இந்த 13 ஆண்டு திரைப்பயணத்தை சூரியா 42 திரைப்படத்தின் படக்குழு மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா உடன் இணைந்து யோகி பாபு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படமும் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
On the occasion of 'Yogi' turning 13,#YogiBabu celebrated by cutting a cake on D sets of #Suriya42 directed by #SiruthaiSiva.He expressed his heartfelt thanks to the film fraternity,media,fans,his family,Directors #SubramaniamShiva, #Ameer, #RamBala & #SundarC ????????????????@iYogiBabu pic.twitter.com/EvvG0scf6S
— RIAZ K AHMED (@RIAZtheboss) November 28, 2022

