தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது தளபதி அறுபத்தி ஆறு என்ற திரைப்படம் வம்சி இயக்கத்தில் உருவாகி வருகிறது.
தில் ராஜூ தயாரிக்க தமன் இசையமைக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சரத்குமார் ஷாம், மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
மேலும் இந்த படத்தில் நடிகர் யோகிபாபு நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர் பதிவின் மூலமாக உறுதிப்படுத்தினார். இந்த பதிவில் ரசிகர் ஒருவர் நீ விஜயோட சேர்ந்து நடித்த எல்லா படமும் தோல்வி தான். சர்க்கார் படத்தில முருகதாஸ் அவுட் ஆயிட்டாரு, பிகில் படத்துல அட்லி அவுட், அதே மாதிரி பீஸ்ட் படத்துல நெல்சன் அவுட். இப்போ அடுத்ததா நடத்துங்க என பதிவு செய்துள்ளார்.
இந்த ரசிகரின் பதிவை பார்த்த யோகி பாபு தேங்க்யூ பா என பதிலடி கொடுத்துள்ளார்.
நீ விஜய் கூட நடிச்சா படம் three all movies flop, சர்கார் ar murugadass out, bigil atlee out, beast Nelson out. Next continue…
— Iyyappan (@Iyyappa27580492) May 3, 2022

