எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின் ஹீரோவாக சில படங்களில் கலக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் யோகி பாபு. முன்னணி நடிகர்களின் படங்களின் தொடர்ந்து காமெடியனாக நடித்து வருகிறார்.
பொதுவாகவே யோகி பாபு அடிக்கடி கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருப்பது அனைவருக்கும் தெரியும் இந்த நிலையில் கோவிலுக்கு போவது குறித்தும் கடவுள் பக்தி குறித்தும் பேசி உள்ளார்.
அதாவது ஷூட்டிங் இல்லை என்றால் நான் கோவிலுக்கு தான் போவேன் என்றும் இது வெறும் நம்பிக்கை மட்டும் என்று சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார். இது மட்டுமில்லாமல் கடவுள் இருக்கிறார் நான் அவர் பின்னாடி ஓடுகிறேன் அவ்வளவு தான் என்று கூறியவர் பிறகு விவரம் தெரிந்த நாளிலிருந்து எனக்கு கடவுள் பக்தி அதிகம் எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் தான் என்று தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


