Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விவாகரத்து குறித்து பரவும் குழப்பம்.விளக்கம் கொடுத்த விஷ்ணு விஷால்.

Actor vishnu-vishal-about-controversy-tweet

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் அட்ட குஸ்தி.

இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் விஷ்ணு விஷால் பதிவு செய்திருந்த பதிவு இரண்டாவது மனைவியுடன் விவாகரத்தா என்ற குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.

ஆமாம் மீண்டும் தோற்று விட்டேன் என அவர் பதிவு செய்திருந்தது குழப்பத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அந்த பதிவு தன்னுடைய திரை பயணம் குறித்தது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியது கிடையாது என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய மனைவி தனக்கு கிடைத்த கிப்ட் என்பது போல பதிவு செய்துள்ளார்.