தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக வலம் வருபவர் தான் விஷால். இவர் தற்போது “லத்தி” என்னும் திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இயக்குனர் வினோத்குமார் இயக்கி வரும் இப்படத்தில் கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக பிரபு அவர்கள் நடித்துள்ளார். இந்த படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து வருகின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இப்படம் விஷால் நடிப்பில் வெளியாகும் முதல் பான் இந்தியா படம் என்பதால் இப்படத்தின் இறுதி கட்ட பணியில் விஷால் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில் விஷால் அவரின் பேஸ்புக்கில் தனது புகைப்படத்துடன் இணைத்து தொடர்ந்து வொர்க் அவுட் செய்வதாகவும் ‘லத்தி’ படத்தின் இறுதிக்கட்ட சண்டைக் காட்சிகளுக்காக தயாராகி வருவதாகவும் பதிவிட்டிருக்கிறார். தற்போது விஷாலின் இந்த பதிவு ரசிகர்களின் இடையே வைரலாகி வருகிறது.

Actor vishal-post-our-work-out-photo