தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் நடிகர் சங்க செயலாளர் ஆகவும் இருந்து வரும் இவர் தேவி அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலமாக பல ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகிறார்.
மேலும் நடிகர் விஷால் சமீபத்தில் ஒன்பது ஏழை தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இப்படி பல்வேறு உதவிகளை செய்து வரும் விஷால் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு தங்க மோதிரம் செயின் உள்ளிட்டவற்றை வழங்கி அழகு பார்த்துள்ளார்.
இது குறித்த போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை மதிக்கும் தலைவன் என விஷாலை ரசிகர்கள் கொண்டாடுவது மட்டுமல்லாமல் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
#ரசிகனைமதிக்கும் #தலைவா
தன் ரசிகர்களுக்கு தங்கம் கொடுத்து அழகு பார்த்த தலைவன் புரட்சி தளபதி விஷால்@VishalKOfficial @HariKr_official@johnsoncinepro @UrsVamsiShekar @ajay_64403 @VishalFans24x7 @VffVishal pic.twitter.com/0GlQBzGjE6— புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் (@VISHAL_SFC) November 8, 2022

