தென்னிந்திய சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் நடிகர் சங்கப் பொருளாளர் என பல்வேறு திறமைகளுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஷால்.
இவரது நடிப்பில் அடுத்த அடுத்த படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் விஷால் அளித்த பேட்டி வீடியோ ஒன்று திடீரென சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அஜித்திடம் பிடிக்காத விஷயம் எது என கேட்க அதற்கு ஓப்பனாக பதில் அளித்துள்ளார் விஷால். அதாவது அஜித் Unavailable ஆக இருப்பதுதான் பிடிக்காது. நாங்கள் எல்லோரும் ஒரே துறையில் இருந்தாலும் அவரை ரீச் செய்வது என்பது முடியாத விஷயம். ஒரு விஷயத்தை அவரை சந்திக்க வேண்டும் என அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்களை தொடர்பு கொண்டு அஜித் அவர்களை சந்திக்க முடியவில்லை. அவர் இப்படி இருப்பது தான் பிடிக்காது என கூறியுள்ளார்.
விஷாலின் இந்த பேச்சுக்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் விஜய் ரசிகர்களிடையே ஆதரவு கிடைத்து வருகிறது.
I dnt like this thing in #Ajith Says #Vishal pic.twitter.com/nF6GeFP14r
— chettyrajubhai (@chettyrajubhai) July 7, 2022