Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் பேபி சாரா.. வைரலாகும் லேட்டஸ்ட் அப்டேட்

actor vikram daughter is acting in a big movie

கே.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “தெய்வத்திருமகள்”. இதில் விக்ரமுடன் இணைந்து அனுஷ்கா, அமலா பால், சந்தானம் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் இதில் குழந்தை நட்சத்திரமாக சாரா அர்ஜுன் அருமையாக நடித்து இப்படத்தின் மூலம் பல விருதுகளையும் பெற்றிருந்தார்.

இந்த தெய்வத்திருமகள் திரைப்படத்தினை தயாரிப்பாளர் சிந்தாமணி தனது யூ.டி.வி தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான பேபி சாரா அர்ஜுன் தற்போது பிரம்மாண்ட படமாக உருவாகி இருக்கும் மணிரத்தினம் அவர்களின் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தின் சிறு வயது தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த தகவல் இப்படத்தின் ட்ரெய்லர் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் இதன் மூலம் விக்ரம் மற்றும் சாரா அர்ஜுனன் இணைந்து மீண்டும் ஒரு திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

actor vikram daughter is acting in a big movie
actor vikram daughter is acting in a big movie