விஜய் சேதுபதி குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார் மகன் சூர்யா.
தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி தற்போது இவரது நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
இவரது மகன் சூர்யா தற்போது ஹீரோவாக பீனிக்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த திரைப்படம் ஜூலை நான்காம் தேதி வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சூர்யா தனது அப்பாவான விஜய் சேதுபதி தங்கை குறித்து பேசிய விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதாவது நான் ஒரு தடவை கோபத்தில் என் தங்கச்சியை அடித்து விட்டேன் உடனே எங்க அப்பா என் பொண்ணு எதுக்கு அடிச்சேன்னு கேட்டாரு முதலில் அடித்தது அவதான்னு சொன்ன அடிச்சா நீயே அடிக்கிற அடிச்சா அடி வாங்கிக்கடான்னு சொன்னாரு என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
