தென்னிந்திய திரை உலகில் ரசிகர்களின் மத்தியில் மக்கள் செல்வனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த ஜூன் 24ஆம் தேதி மாமனிதன் திரைப்படம் வெளியானது.
இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று இருந்தது. மேலும் இப்படத்திற்கு பல விருதுகளும் வழங்கப்பட்டது. இந்நிலையில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன் படத்துக்கு 40 வது விருதுகள் கிடைத்துள்ளது. இது குறித்து நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் 3 ஐஎம்டிபி விழாக்களுக்கும் தேர்வாகியுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
#Maamanithan has acquired 40 awards at International Film Festivals & shortlisted for 3 festivals on @IMDb@seenuramasamy @SGayathrie @YSRfilms @thisisysr @studio9_suresh @onlynikil @CtcMediaboy pic.twitter.com/C1A7boid36
— VijaySethupathi (@VijaySethuOffl) December 1, 2022