Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வெள்ளித்திரையில் ஹீரோவாக களமிறங்கப் போகும் விஜய் சேதுபதி மகன்.வைரலாகும் தகவல்

Actor vijay-sethupathi-son-soon-to-be-a-hero

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகம் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து இருந்ததை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சினிமாவில் ஷாருக்கான் நடிப்பில் உருவாக்கியுள்ள பதான் படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது விஜய் சேதுபதி தமிழ் தெலுங்கு மலையாளம் என பழமொழி படங்களில் நடித்து வருகிறார். இவரது மகன் சூர்யா சிந்துபாத் என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த நிலையில் தற்போது விடுதலை படத்திலும் அப்பாவுடன் சேர்ந்து நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யா ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் தான் இவர் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என செய்திகள் தீயாக பரவி வருகிறது.

விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

Actor vijay-sethupathi-son-soon-to-be-a-hero
Actor vijay-sethupathi-son-soon-to-be-a-hero