actor-vijay-master-movie-hindi-dubbed
கோலிவுட் திரை உலகில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் பல திரை நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் இப்படத்தின் அப்டேட்கள் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தமிழில் ஊரடங்கு சமயத்தில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை படைத்திருந்தது.
தற்போது இந்தப் படத்தின் இந்தி டப்பிங் நேற்று யூடியூபில் வெளியானது. வெளியான 18 மணி நேரத்திலேயே 2 லட்சம் பார்வையாளர்களை பெற்று மாஸ்டர் திரைப்படம் மீண்டும் சாதனை படைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கும் விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’.…