Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிச்சைக்காரன் 2 படம் பற்றி ட்விட்டர் பதிவு வெளியிட்ட விஜய் ஆண்டனி

actor vijay antony twitter post viral update

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக பல ரசிகர்களின் மனதை கவர்ந்து தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் ஏற்கனவே வெளியாகி இருந்த பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் விஜய் ஆண்டனிக்கு முகத்தில் பலமான காயங்கள் ஏற்பட்டது.

இதனால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த விஜய் ஆண்டனி தற்போது உடல் நலம் தேறி இருக்கும் நிலையில் ‘பணம் உலகை காலி பண்ணிடும்’ என குறிப்பிட்டு பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கும் தகவலை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். இதற்கு ரசிகர்களும் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இத்தகவலை வைரலாக்கி வருகின்றனர்.