Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகர் விஜய் ஆண்டனி உடல்நிலை குறித்து தயாரிப்பாளர் போட்ட பதிவு.!!

actor vijay antony after accident health condition update

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தற்போது முன்னணி ஹீரோவாகவும் வளம் வருபவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டில் சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதனால் இப்படத்தில் இரண்டாம் பாகத்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் ஆண்டனியே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் மலேசியா மற்றும் லங்காவி தீவில் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் லங்காவியல் மருத்துவமனையில் விஜய் ஆண்டனி அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து தயாரிப்பாளர் வெளியிட்டிருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர், விஜய் ஆண்டனி அவர்கள் வேகமாக குணமடைந்து வருவதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். லங்காவியல் உள்ள மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்கும் அவரை அவரது குடும்பத்தினர் காண சென்றடைந்துள்ளனர். விரைவில் அவரை சென்னைக்கு அழைத்து வருவார்கள். அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் செயல்பட அனைவரும் பிரார்த்திப்போம் என்றும் அப்பதிவில் பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.