actor surya-next-movie-updates
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது கங்குவா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கும் இந்த படம் மிகப் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இதைத்தொடர்ந்து நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருவதால் இந்த படம் இன்னும் தள்ளி போகும் என தகவல் வெளியானது.
மேலும் சூர்யா நடிப்பில் உருவாக இருந்த அருவா, வணக்கம் போன்ற படங்கள் பாதியிலேயே டிராப்பான காரணத்தினால் ரசிகர்கள் விரக்தியில் இருந்து வந்த நிலையில் தற்போது சூப்பர் டூப்பர் கூட்டணி அமைய இருப்பது சூர்யாவையும் சேர்த்து குளிர வைத்துள்ளது.
ஆமாம் சூர்யா மற்றும் சுதா கொங்காரா கூட்டணி தான் மீண்டும் அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் இந்த கூட்டணி அமைய இருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1