Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபு வீட்டில் ஆதிக் மற்றும் ஐஸ்வர்யா மணமக்களை சந்தித்து வாழ்த்து கூறிய சூர்யா. போட்டோ இதோ

actor-suriya-wish-director-adhik-ravichandran-aishwarya

“திரைத்துறையில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் பிரபல நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் சமீபத்தில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அந்த வகையில், திருமணத்திற்கு செல்ல முடியாத நடிகர் சூர்யா மணமக்களை அவர்களது வீட்டிற்கு சென்று வாழ்த்தியுள்ளார்.

நடிகர் பிரபு வீட்டில் ஆதிக்-ஐஸ்வர்யா தம்பதியை சந்தித்த நடிகர் சூர்யா மணமக்களை வாழ்த்தினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்தது.”,

actor-suriya-wish-director-adhik-ravichandran-aishwarya
actor-suriya-wish-director-adhik-ravichandran-aishwarya