Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாலா இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் சூர்யா.. வைரலாகும் தகவல்

Actor Suriya Role in Upcoming Bala Movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னதாக பாலா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

சூர்யாவின் சொந்த தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் சித்திரை மாதத்தில் மதுரையில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் சூர்யா காதுகேளாத வாய்பேச முடியாதவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அதற்கான ஒர்க் அவுட்டில் தற்போது அவர் இறங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

பேரழகன் படத்திற்கு பிறகு மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மொழி படத்தில் ஜோதிகா முன் இதே பல் காது கேளாதவராக, வாய் பேச முடியாதவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Suriya Role in Upcoming Bala Movie
Actor Suriya Role in Upcoming Bala Movie