Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கங்குவா பட குழுவிற்கு விருந்து வைத்து அசத்திய சூர்யா மற்றும் பிரபாஸ். போட்டோஸ் வைரல்

actor suriya prabhas treat to kanguva movie team

தமிழ் சினிமாவில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

3டி தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிக்குடியில் அடர்ந்த காடுகளில் நடத்தப்பட்டு வருவதாக தகவல் சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் அனைவருக்கும் சூர்யா மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸும் இணைந்து அனைவருக்கும் சைவம் மற்றும் அசைவ உணவுகளை விருந்தாக கொடுத்துள்ளனர். அதன் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.