Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அவர்தான்.. ரஜினிகாந்த் குறித்து பேசிய சுராஜ் வெஞ்சாரமூடு..!

actor suraj venjaramoodu talk about jailer 2 movie

ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இது மட்டுமில்லாமல் அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு மிர்னா மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுராஜ் வெஞ்சாரமூடு இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார். அதாவது நெல்சன் ஒரு நகைச்சுவை காட்சியில்தீவிரமான பிரச்சனைகளை வைத்துள்ளார் என்றும் அது அற்புதமான இருந்தது என்றும் கூறியுள்ளார். இது மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் வேறு யாரும் இப்படி அப்படி செய்ததில்லை எனக் கூறிய இவர் ரஜினிகாந்த் சாரருடன் ஒரு காம்பினேஷன் சீன் இருந்தது நான் பதற்றத்தில் இருந்தே என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் நடிக்கும் போது அவரது எல்லா படங்களும் என் கண்களுக்கு முன்பாக மின்னும் அந்த உணர்வை உடைத்து எனது வசனங்களை சொல்வது தான் எனக்கு சவாலாக இருந்தது என்று தெரிவித்துள்ளார் இது மட்டுமில்லாமல் அவர் வீரதீர சூரன் பார்த்தேன் நல்லாருக்கு நல்லா நடிச்சு இருக்கீங்க என்று கூறியதாகவும் அவர் எப்போதும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் எனவும் பாராட்டி உள்ளார்.

இவரின் இந்த பேச்சு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரிக்கச் செய்துள்ளது.

actor suraj venjaramoodu talk about jailer 2 movie
actor suraj venjaramoodu talk about jailer 2 movie