actor soori viral post about isai gnani ilayaraja
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் தற்போது முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கடந்த 31ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் இப்படத்தில் சூரியுடன் இணைந்து விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ரசிகர்களால் தொடர்ந்து விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் நடிகர் சூரி இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார். இதனைக் குறிப்பிட்டு சூரி பகிர்ந்திருக்கும் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர், சற்று நேரம் முன்பு, இசையை நேரில் சந்தித்து நன்றி கூறினேன், ஆசி வாங்கினேன். இறைவனுக்கு நன்றி என இளையராஜாவுடன் இணைந்து எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படத்துடன் இணைத்து இப்பதிவினை பகிர்ந்து இருக்கிறார்.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…