Actor Sivakarthikeyan Say No Keerthi Suresh
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டான் என்ற திரைப்படமும் அயலான் என்ற படமும் வெளியாக உள்ளது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிறது.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்க நோ சொன்ன வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் படத்தில் நடித்தார்.
அதன் பின்னர் இந்த கூட்டணி மீண்டும் ரெமோ படத்தில் இணைந்தது. ஆனால் ரெமோ படத்தில் கீர்த்தி சுரேஷ் வேண்டாம் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார். ஒரே நடிகையுடன் அடுத்தடுத்த படங்களில் இணைந்து நடித்தால் கிசுகிசு பேச தொடங்கிவிடுவார்கள். அதனால் கீர்த்தி சுரேஷ் வேண்டாம் என்று சொன்னேன். அதன்பிறகு வேறு சில நடிகைகளிடம் பேச அவர்கள் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.
இயக்குனரும் பிசி ஸ்ரீராம் அவர்களும் கீர்த்தி சுரேஷ் இதற்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் என சொன்னனர். அதற்கேற்றார் போலவே அவர் மிக அழகாக நடித்திருந்தார் என சிவகார்த்திகேயன் இந்த படத்தில் விழா ஒன்றில் பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
பெர்சிமன் படத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. இந்த…
Indian Penal Law (IPL) - Official Teaser | TTF Vasan | Kishore | Kushitha |…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…