தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் தொகுப்பாளராக வளர்ந்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன்.
இவரது நடிப்பில் மே 13ஆம் தேதி டான் என்ற திரைப்படம் வெளியாகிறது. தொடர்ந்து தெலுங்குவில் உருவாகி வரும் படத்தில் நடிக்கிறார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.
தற்போது இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக அதுவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதாவது சுதந்திரப் போராட்ட வீரராக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Actor Sivakarthikeyan Role in Rajkumar Periyasami Movie

