Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தலைவர் 171 படத்தில் இணையப் போகும் முன்னணி நடிகர். எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்

actor sivakarthikeyan-joins-with-rajinikanth

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக கதை அமைக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தின் சூட்டிங் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இப்படத்தில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

இதனால் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியாகும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

actor sivakarthikeyan-joins-with-rajinikanth
actor sivakarthikeyan-joins-with-rajinikanth