தமிழ் சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான டான் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இவரது நடிப்பில் பிரின்ஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை நாயகியாக நடித்துள்ள இந்த திரைப்படத்தை அனுதீப் இயக்கி உள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தில் ஓடிடி உரிமையை ஹாட்ஸ்டார் மற்றும் சாட்டிலைட் உரிமை விஜய் டிவி இரண்டையும் சேர்த்து 42 கோடி வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது சிவகார்த்திகேயன் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
