தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆர்டர் பயணத்தை தொடங்கி தொகுப்பாளர் காமெடி நடிகர் என படிப்படியாக வளர்ந்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.
இவரது நடிப்பில் அடுத்ததாக மே மாதத்தில் டான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
இந்த படத்தின் பிரமோஷனுக்காக அளித்த பேட்டி ஒன்றில் சீமராஜா படத்தின் வசூல் குறித்து ஓப்பனாக தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். அதாவது படம் தோல்வி தான் ஆனால் தமிழகத்தில் இந்த படத்திற்கு 25 கோடி ஷேர் கிடைத்தது என தெரிவித்துள்ளார்.
இவருடைய இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


