Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரீமேக் படங்களில் நடிக்காததற்கு காரணம் இதுதான்… சிவகார்த்திகேயன் வைரல் வீடியோ

Actor Sivakarthikeyan About Remake Movies

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக அயலான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

இந்த நிலையில் இவர் ரீமேக் படங்களில் நடிக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பிரேமம், ஆள வைகுந்த பெருமாள் படத்தின் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு வந்தது.

ஆனால் ரீமேக் படங்களே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதற்கான காரணம் ரீமேக் படங்களில் நடிக்கக் கூடாது என்பதல்ல, எனக்குள் இருக்கும் பயம் தான் காரணம் என கூறியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் எல்லா விதமான படங்களையும் பார்த்து விடுகிறார்கள். அதனால் ஏற்கனவே பார்த்த ஒரு படத்தில் மீண்டும் நடிப்பது எந்த அளவிற்கு வெற்றியைத் தரும் என்பது எனக்கு பயம் இருக்கிறது.

அதன் காரணமாகவே நான் ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் ரீமேக் படங்களில் நடிக்காத ஒரே ஹீரோ நானாகத்தான் இருப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 Actor Sivakarthikeyan About Remake Movies

Actor Sivakarthikeyan About Remake Movies