சிம்புவின் நடிப்பில் தற்போது திரையில் வெளிவர தயாராக இருக்கும் படம் தான் “வெந்து தணிந்தது காடு”. இப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இதில் கயாடு லோக்கர் மற்றும் சித்தி இட்னானி என்று இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர் வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம் சார்பில் கணேஷ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசை புயலான ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்திற்கான டீசர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்லா வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்தில் வெளிநாடுகளில் வெளியிடுவதற்கான முழு உரிமையை பிரபல விநியோக நிறுவனமான “யுனைடெட் இந்தியன் எக்ஸ்போர்ட்ஸ்” நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக இணையத்தில் பதிவிட்டிருந்தது. அதேபோல் தற்போது தமிழக தியேட்டர் விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் இப்படத்தை வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியிடப் போவதாகவும் அந்நிறுவனம் நேற்று ஒரு ஸ்பெஷல் வீடியோ மூலம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
மேலும் அதில் இதற்கு முன் சிம்பு-கௌதம் மேனன் காம்போவில் உருவான “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தை 2010 ஆம் ஆண்டு ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் வெளியிட்டது என்றும் இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கௌதம் மேனன்-சிம்பு கூட்டணியில் தானும் இணைந்துள்ளதாக ரெட் ஜென்ட் மூவிஸ் நிறுவனம் பெருமையுடன் வழங்குவதாக பதிவிட்டிருந்தது.
இதுகுறித்து சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் “12 வருடங்கள் கழித்து மீண்டும் உங்களுடன் இணைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அண்ணா,” என்று ரீட் ட்வீட் செய்துள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Very Happy to associate with you after 12 years na @Udhaystalin & @RedGiantMovies_ @MShenbagamoort3 #VTKOnSep15th #VendhuThanindhathuKaadu @IshariKGanesh @menongautham @arrahman @VelsFilmIntl https://t.co/l3uahlvQE4
— Silambarasan TR (@SilambarasanTR_) July 9, 2022