தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனையடுத்து தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிவரும் பத்து தல என்ற படத்தில் நடிக்கிறார்.
இப்படி அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் சிம்புவின் லேட்டஸ்ட் கெட்டப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து அவர் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அந்த நிகழ்ச்சிக்காக தான் இந்த புதிய கெட்டப் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
BIGG BOSS ULTIMATE
NEW HOST #STR???? pic.twitter.com/tmXN4KiI34— Lovable❤ Idiot???? (@Lovable_Idiot10) February 23, 2022

