தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் தற்போது ஹீரோவாக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
இறுதியாக இவரது நடிப்பில் வெளியான மாநாடு படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது 10 தல, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. மேலும் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துபாய் சென்ற போது எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram