இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘புளூ ஸ்டார்’ (Blue Star). இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார்.
‘புளூ ஸ்டார்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், இப்படம் குறித்து நடிகர் ஷாந்தனு தனது சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில், ‘சக்கரக்கட்டி’ முதல் ‘புளூ ஸ்டார்’வரையிலான இந்த பயணம் எனக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தது. வாழ்க்கை முழுவதும் நினைத்து பார்க்கக்கூடிய நிறைய நல்ல நினைவுகளை கொடுத்தது. உங்க வீட்டு பசங்க ஜெயிக்கிற படம்தான் ‘புளூ ஸ்டார்’. இன்று முதல் உலகமெங்கும் வெளியாகிறது. திரையரங்கிற்கு சென்று பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு இந்த படம் பிடிக்கும். ஜெயிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
My journey from #Sakkarakatti to #Bluestar… a journey that has taught me so many lessons, a rollercoaster of emotions & unforgettable memories which I’m thankful for in life ????????
Only Positivity here onwards ❤️
Unga veetu pasanga jeikre padam dhan #Bluestar ????????
WORLDWIDE from… pic.twitter.com/TuYUnOq9Pb— Shanthnu (@imKBRshanthnu) January 25, 2024

