Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“நிஜ ஹீரோ ரஜினி தான்!” – ‘கூலி’ படப்பிடிப்பில் சத்யராஜ் பாராட்டு! லோகேஷ் பகிர்ந்த ஆச்சரிய தகவல்!

actor sathyaraj talk about rajinikanth

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வழக்கம்போல படத்தின் எந்த தகவலும் கசியாத வண்ணம் பார்த்துக்கொண்ட லோகேஷ், தற்போது படம் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

குறிப்பாக, இப்படத்தில் நாகார்ஜுனா, அமீர்கான், உபேந்திரா போன்ற பிற மொழி நட்சத்திரங்கள் ரஜினியுடன் முதன்முறையாக இணைந்து நடித்திருந்தாலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சத்யராஜ் ரஜினியுடன் இணைந்து நடிப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக ‘சிவாஜி’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க சத்யராஜுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது அவர் மறுத்திருந்தார். மேலும், அவ்வப்போது ரஜினி குறித்து விமர்சிக்கும் தொனியில் பேசியிருந்தார். அப்படிப்பட்ட சத்யராஜ் தற்போது ‘கூலி’ படத்தில் ரஜினியுடன் இணைந்ததற்கு காரணம் லோகேஷ் கனகராஜின் கதையும், சத்யராஜின் கதாபாத்திரமும்தான் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ், ‘கூலி’ படப்பிடிப்பில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த ஒரு காட்சியை சத்யராஜிடம் லோகேஷ் போட்டுக் காட்டியுள்ளார். அந்த காட்சியைப் பார்த்த சத்யராஜ், “சிலர் ஹீரோக்களாக நடிப்பார்கள். ஆனால் உண்மையிலேயே நிஜ வாழ்வில் ஒருவர் ஹீரோவாக இருக்க முடியும் என்றால் அது ரஜினி தான்” என்று ரஜினியை பாராட்டியதாக லோகேஷ் தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையே நிலவிய முந்தைய கருத்து வேறுபாடுகளை மறந்து சத்யராஜ் இவ்வாறு பாராட்டியது லோகேஷுக்கே ஆச்சரியத்தை அளித்ததாக அவர் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

actor sathyaraj talk about rajinikanth

actor sathyaraj talk about rajinikanth