தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ஜோடியாக இணைந்து நடிக்கும் நிஜ வாழ்க்கையிலும் திருமண பந்தத்தில் இணைந்து தற்போது இரண்டு குழந்தைகளுக்கு அப்பா அம்மாவாகி உள்ளனர் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ்.
சஞ்சீவ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கயல் சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். ஆலியா மானசா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த நிலையில் பிரசவத்தின் காரணமாக அதிலிருந்து விலகிக் கொண்டார். தற்போது அவருக்கு பதிலாக ரியா என்ற புதுமுக நடிகை நடித்து வருகிறார்.
சமீபகாலமாக இவர்களது யூடியூப் சேனலுக்கு பார்வையாளர்கள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது இவர்களுக்கு கோல்ட் சீட் வழங்கப்பட்டுள்ளது. மகன் பிறந்த அதிர்ஷ்டம் தங்களுக்கு கோல்ட் ஷீல்ட் கிடைத்திருப்பதாக மகிழ்ச்சியோடு இருவரும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இவர்களது இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
