Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித் 61 படத்தில் இருந்து முக்கிய பிரபலம்.. வைரலாகும் போட்டோ

Actor samuthirakani-join-to-ajith-61

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியானதே தொடர்ந்து தற்போது வினோத் இயக்கத்தில் பூனை கபூர் தயாரிப்பில் உருவாக்கி வரும் அஜித் 61 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மலையாள லேடிஸ் சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் நாயகியாக நடித்த பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டரை போனி கபூரின் மனைவி ஸ்ரீதேவியின் பிறந்தநாள் ஆன ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் பிரபல இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி அவர்கள் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனை உறுதி செய்யும் விதமாக தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் அஜித் இல்லாத காட்சிகளைப் படக்குழு படமாக்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஷூட்டிங்கில் சமுத்திரக்கனி கலந்துகொண்டுள்ளார். அவர் அப்போது தனது ரசிகரோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor samuthirakani-join-to-ajith-61
Actor samuthirakani-join-to-ajith-61