தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஸ்டாண்ட்அப் காமெடியனாக பயணத்தை தொடங்கி வெள்ளி திரையில் முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட இவர் பிறகு மீண்டு வந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார் ஆனால் எதிர்பாராத விதமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரின் இறப்பு அவரது குடும்பத்தினர் மட்டுமில்லாமல் ரசிகர்கள் பிரபலங்கள் என பலருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது இந்த நிலையில் ரோபோ சங்கர் கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டிருந்ததாகவும் திடீரென அவர் உயிரிழந்ததால் அந்த ஆசை நிறைவேறாமல் போய் உள்ளது. இதனால் கமல்ஹாசன் முடிவு ஒன்று எடுத்துள்ளார்.
அதாவது கமல்ஹாசன் படத்தில் ரோபோ சங்கரின் மகளான இந்திராஜாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இருப்பதாக கூறியுள்ளாராம். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
