தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி ,மழை, இதயத்திருடன், சம்திங் சம்திங், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ஆதி பகவன் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் நாளை உலகம் முழுவதும் புத்தாண்டு நாளை கொண்டாட இருக்கும் நிலையில் ரவி மோகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த வருஷம் என் கூட இருந்த எல்லோருக்குமே நன்றி குறிப்பா என்னோட பான்ஸ் அவங்க என்னோட முதல் படத்திலிருந்து என் கூட இருக்காங்க எல்லோருக்கும் நியூ இயர் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
இவரின் வாழ்க்கை பார்த்த ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் இவருக்கு இவர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


