Actor Rakul Rama krishna Exit from Cinema
இனி சினிமாவில் நடிக்கமாட்டேன் என பிரபல நடிகரின் திடீர் அறிவிப்பால் அதிர்ந்து போன ரசிகர்கள்.
2017ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு நண்பனாக நடித்தவர் ராகுல் ராமகிருஷ்ணா. இதில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு தொடர்ந்து ‘அல வைகுந்தபுரமுலோ’, ‘ஜதிரத்னலு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான ‘ஸ்கைலேப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ராஜமௌலி இயக்கியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படத்திலும் இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா திரைத்துறையிலிருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பு ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘2022-ம் ஆண்டுதான் எனக்கு கடைசி. இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். இது குறித்து எனக்கு கவலை இல்லை, யாரும் கவலைப்பட வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த அறிவிப்பு சினிமா துறையினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…