கோலிவுட் திரை வட்டாரத்தில் தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் தளபதி விஜய் அவர்கள் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் படம் தான் வாரிசு. தெலுங்கு இயக்குனர் வம்சி படைபள்ளி இயக்கி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது.
இப்படம் குறித்த பல்வேறு தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் உடன் இணைந்து நடிக்கும் பிரகாஷ்ராஜ் அவர்கள் ஒரு நேர்காணலில் விஜய் குறித்து பேசியுள்ளார்.
அதில் செல்லத்துடன் (விஜய்) 15 வருடத்திற்கு பிறகு நடிக்கிறேன் என நினைக்கிறேன். நீண்ட இடைவெளி விழுந்து விட்டது. படத்தின் கதையை சொல்லணுமா வேண்டாமா என தெரியாது எனக்கு. ஆனால் செல்லம் வி ஆர் பேக் என பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
. @prakashraaj about his role in #Varisu Movie@actorvijay #Beast pic.twitter.com/GUBJBJ7uSy
— Namakkal OTFC (@Namakkal_OTFC) August 12, 2022