Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபுவுக்கு என்ன ஆச்சு. திடீரென நடந்த அறுவை சிகிச்சை. வைரலாகும் தகவல்

actor-prabhu-admitted-in-hospital-details

தமிழ் சினிமாவில் ஹீரோவாக பல்வேறு படங்களில் நடித்து தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் பிரபு. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான இவரும் தனது நடிப்பால் எக்கச்சக்கமான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தற்போது இவருக்கு திடீரென உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு கடந்த திங்கட்கிழமை அன்று கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு சிறுநீரக கல் இருப்பதை கண்டுபிடித்து லேசர் அறுவை சிகிச்சை மூலம் அந்த கல்லை அகற்றி உள்ளனர்.

இந்த நிலையில் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரபுவுக்கு லேசர் அறுவை சிகிச்சை மூலம் கல் அகற்றப்பட்டதாகவும், ஓரிரு நாட்கள் பொதுவான சிகிச்சை பெற்று வீடு திரும்புவார் எனவும் தெரிவித்துள்ளது.

actor-prabhu-admitted-in-hospital-details

actor-prabhu-admitted-in-hospital-details