Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிரிப்பின் ரகசியத்தை குறித்து வீடியோ வெளியிட்ட பார்த்திபன்

actor parthiban twitter post video viral update

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் மற்றும் இயக்குனராக வலம் வருபவர் பார்த்திபன். இவர் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மாபெரும் நட்சத்திர பட்டாளங்களை இணைந்து நடித்து இன்று உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் “பொன்னியன் செல்வன் 2” பாகத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர், “பின்னாளில் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாது.நமக்குப் பின்னால் என்னென்ன நடக்கிறது என்பதை கவனிக்க ’மூன்றாம் கண்’ தேவைப்படுகிறது. ஒரு புன்னகைக்கே வருடம் முழுக்க தவமிருக்கும் எனக்கு,வாய்விட்டு சிரிப்பதெல்லாம் வாழ்க்கையின் வரமே எனக் குறிப்பிட்டு அவர் வாய்விட்டு சிரித்துக் கொண்டிருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.