தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இன்று இந்தியாவில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைக்க உள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இது குறித்து பதிவு செய்துள்ளார்.
அதாவது அவரது பதிவில், இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் – செங்கோல்.#தமிழன்டா தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் @narendramodi அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி என தெரிவித்திருந்தார்.
இவரது இந்த பதிவு குறித்து பார்த்திபன் பதிவு செய்துள்ள பதிவு விவாதமாக மாறி உள்ளது. அதாவது, ரஜினி சார், உங்களுக்கு போன் செய்து ட்வீட் செய்ய உத்தரவிட்டது யார் சார்? #Rajinikanth என பதிவு செய்ய பலரும் இது பற்றி கருத்து கூறி வருகின்றனர்.
இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் – செங்கோல்.#தமிழன்டா
தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் @narendramodi அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
— Rajinikanth (@rajinikanth) May 27, 2023
ரஜினி சார், உங்களுக்கு போன் செய்து ட்வீட் செய்ய உத்தரவிட்டது யார் சார்? #Rajinikanth
— RadhakrishnanRK (@RKRadhakrishn) May 27, 2023