Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வதந்தியை பரப்பிய நபரை சுட்டிக்காட்டி பார்த்திபன் போட்ட பதிவு

actor-parthiban-post-on-rumors-news

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பார்த்திபன். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான ஒத்த செருப்பு மற்றும் இரவு நிழல் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சின்ன பழுவேட்டையராக நடித்து அசதியிருந்தார். தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் இவர் 52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு என்னும் தலைப்பில் தனது அடுத்த படத்தையும் இயக்க இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் திடீரென உயிரிழந்ததாக அதிர்ச்சி அளிக்கும் வதந்தியை ட்விட்டர் பக்கத்தில் நெட்டிசன்கள் பரப்பியுள்ளனர். இது குறித்து நடிகர் பார்த்திபன் ஏற்கனவே ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால் தற்போது இது தொடர்பாக மீண்டும் அவர் வெளியிட்டிருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

அதில் அவர், “இருப்பவரை போனவராக்கி வாங்கும் வியூகம் அமைத்தவரையே காவு வாங்கும், வருவதைத் தவிர்க்க இயலாது, தள்ளிப் போட ஆரோக்யம் கூட்டலாம். வாங்க போலி கிங் வாக்கிங் போகலாம், மூச்சு பயிற்சி செய்யலாம், உடற்பயிற்சி செய்யலாம், மனிதத்துடன் அமைதியாய் வாழ முயற்சி செய்யலாம் மகிழ்வோம் மகிழ்விப்போம். என்று வதந்தியை பரப்பிய நபரை சுட்டிக்காட்டி இப்பதிவினை பகிர்ந்து இருக்கிறார்.