தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரும், நடிகருமான திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் பார்த்திபன். இவர் தற்பொழுது மணிரத்தினம் இயக்கத்தில் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர தயாராக இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சின்ன பழுவேட்டரையராக நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரமான நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் பற்றி தனது கவிதைகள் மூலம் புகழ்ந்து தள்ளி இருக்கிறார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது.
அதில் அவர், ஐஸ் வாரியம் !கற்றுக் கொள்ள..காற்று கொள்ளும் மூங்கில் துளைகளில் இருந்து இசை வரும் என கோடியாய் கொட்டிக் கிடக்கின்றது இப்பூமியில். அப்படிஇப்பெண்ணிடமிருந்து.தாயானப் பிறகும், தான் விரும்பும் கலையை தொடர, ஆரோக்கியத்தை + அழகை காத்திட கடும் முயற்சியும், விடா பயிற்சியும் செய்கிறார்.அழகென நான் காண்பது.பிறைநிலவு வானில் இருந்து மறையுமுன்னேமுழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர் வசனங்களை(இடை வரும் புன்னகை உட்பட) மனப்பாடம் செய்து one more கேட்கா egoவுடன்தயாராகிவிட்டு, பின் அனைவரிடமும்(selfie) அன்பொழுக பழகுகிறார்” எனக் குறிப்பிட்டு அவருடன் எடுத்துக்கொண்ட சில செல்பி புகைப்படங்களையும் பதிவிட்டிருக்கிறார்.
Conti…
அழகென நான் காண்பது…
பிறைநிலவு வானில் இருந்து மறையுமுன்னே
முழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர்
வசனங்களை(இடை வரும் புன்னகை உட்பட) மனப்பாடம் செய்து one more கேட்கா egoவுடன்
தயாராகிவிட்டு,பின் அனைவரிடமும்(selfie) அன்பொழுக பழகுகிறார். pic.twitter.com/eQzvyTzopg— Radhakrishnan Parthiban (@rparthiepan) September 26, 2022
ஐஸ் வாரியம் !
கற்றுக் கொள்ள….
காற்று கொள்ளும் மூங்கில் துளைகளில் இருந்து இசை வரும் என கோடியாய் கொட்டிக் கிடக்கின்றது இப்பூமியில்.அப்படி
இப்பெண்ணிடமிருந்து…
தாயானப் பிறகும்,தான் விரும்பும் கலையை தொடர,ஆரோக்கியத்தை+அழகை காத்திட கடும் முயற்சியும்,விடா பயிற்சியும் செய்கிறார்conti pic.twitter.com/QNegeqscST— Radhakrishnan Parthiban (@rparthiepan) September 26, 2022