Actor nazar-quit-our-acting-field
தமிழ் திரையுலகில் இயக்குனர் ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்தவர்தான் கே. பாலச்சந்தர். இவரின் இயக்கத்தின் மூலம் உருவாக்கியுள்ள இரண்டு முத்துக்கள் தான் ரஜினி மற்றும் கமல் அவர்கள். இவர்களைப் போலவே பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான “கல்யாண அகதிகள்” என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் தான் நாசர்.
இதனைத் தொடர்ந்து நாசரின் நடிப்பில் வெளியான தேவர் மகன், குருதிப்புனல், பம்பாய் போன்ற படங்களினால் தமிழ் சினிமாவில் சிறந்த வில்லனாகவும் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தார். மேலும் நடிகர், தயாரிப்பாளர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் நடிகர் சங்க தலைவர் போன்று பல முகங்கள் கொண்டுள்ள இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் சிறந்த நடிகராக திகழ்ந்திருக்கிறார்.
மேலும் ‘பாகுபலி’ படத்தின் மூலம் தனது ஒட்டுமொத்த நடிப்பையும் கொடுத்து அனைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். சினிமாவையும் தாண்டி அரசியலில் நுழைந்து கமலின் மக்கள் நீதி மையம் கட்சியிலும் பணியாற்றி வந்தார். இரண்டாவது முறையாக நடிகர் சங்கம் தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர் தற்போது சினிமாவில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏனென்றால் கொரோனா தொற்று காலகட்டத்தில் இதய பாதிப்புகளால் நடிகர் நாசர் மிகவும் கஷ்டப்பட்டு இருந்தார். அதற்குரிய சிகிச்சைகளை பெற்று வந்த இவர் தற்போது அவரின் உடல் நலம் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அவரின் உடல்நலம் சீராகி அவர் மீண்டும் நடிக்க வேண்டும் என்று வாழ்த்தி வருகின்றனர். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு சசிகுமார் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…