தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர் சீசன் 2. இந்த சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கதாபாத்திரத்தில் நடிக்க வந்த வாய்ப்பு, பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியல் கதிர் வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்பு என கிட்டத்தட்ட ஐந்து விஜய் டிவி சீரியல் வாய்ப்புகளை நிராகரித்துள்ளார் பிரபல நடிகர்.
அவர் வேறு யாரும் இல்லை தற்போது சின்ன மருமகள் சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் நவீன் தான். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியல் மூலம் பாப்புலரான இவர் கிராமத்து கதைக்காக இந்த சீரியல் வாய்ப்புகளை நிராகரித்ததாக தெரிவித்துள்ளார்.
