சமந்தா குறித்து நாகசைதன்யாவிடம் கேட்ட கேள்வி.. ஓப்பனாக பேசி முற்றுப்புள்ளி வைத்த நாகசைதன்யா

தெலுங்கு திரை உலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக அனைவருக்கும் பரிச்சயமான நடிகர் தான் நாகசைதன்யா. இவர் பிரபல முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் நான்கு ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்து கொண்டனர்.

இது குறித்த கேள்விகளை அவ்வப்போது ரசிகர்கள் சமந்தா விடவும், நாகசெய்தன்யா விடவும் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகின்றனர். அதேபோல் சமீபத்தில் கூட நடிகை சமந்தா கலந்து கொண்ட ‘காபி வித் கரன்’ நிகழ்ச்சியில் நடிகர் கரண் ஜோஹர் தொடர்ச்சியாக நாக சைதன் யாவை பற்றிய கேள்வியை சமந்தா விடம் கேட்டு கடுப்பாக்கியுள்ளார். அதில் கோபமாக பேசிய சமந்தாவின் பதிவு வைரலாகி வந்தது.

அதேபோல் தற்போது ஒரு டாக் ஷோவில் கலந்து கொண்ட நாகசைதன்யா, அமீர் கானுடன் இணைந்து தான் நடித்துள்ள ‘லால்சிங் சத்தா’ படம் குறித்து பல தகவல்களை வெளியிட்டார். அப்போது அவரிடத்தில் சமந்தா குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, அதற்கு ”நாங்கள் இருவரும் என்ன சொல்ல விரும்புகிறோமோ அது குறித்து இருவருமே அறிக்கை வெளியிட்டோம். இப்போது இருவருமே அவரவர் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்.

அதனால் மீண்டும் பழைய வாழ்க்கை குறித்து பேசி தேவையில்லாத விமர்சனங்களை சந்திக்க விரும்பவில்லை. அதோடு எங்களது கடந்த கால வாழ்க்கை குறித்து அதிகப்படியான விஷயங்களை இந்த உலகிற்கு அறிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை” என்று சமந்தா குறித்த கேள்விக்கு நடிகர் நாகசைதன்யா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த தகவல் தற்போது வேகமாக பரவி வருகிறது.

Actor naga-chaitanya-about-samantha
jothika lakshu

Recent Posts

Love Insurance Kompany Trailer

Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty

1 day ago

Yenjaamiye Video Song

Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan

1 day ago

Nooru Sami Official Teaser

Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…

1 day ago

‘லீடர்’ திரை விமர்சனம்

கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…

1 day ago

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…

1 day ago

நீளிரா திரை விமர்சனம்

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…

1 day ago