முன்னணி நடிகரை ஹீரோவாக வைத்து படம் இயக்கப் போகும் குட் நைட் மணிகண்டன்

தமிழ் சினிமாவில் திரைக்கதை ஆசிரியர், நடிகர் என பன்முக திறமைகளோடு வலம் வருபவர் மணிகண்டன்.

இவரது நடிப்பில் வெளியான குட் நைட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதேபோல் ஜெய் பீம் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டுக்களை பெற்றது.

இப்படி தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்வு செய்து மணிகண்டன் நடிப்பில் ஸ்கோர் செய்து பலரின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் அடுத்ததாக இயக்குனர் அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆமாம் நடிகர் விஜய் சேதுபதி சந்தித்து ஒரு கதையை கூறியதாகவும் அந்த கதை அவருக்கும் பிடித்து விட தற்போது கதையை வடிவமைக்கும் காலத்தில் இறங்கி இருப்பதாகவும் தெரியவந்துள்ளன. விரைவில் இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற விக்ரம் வேதா படத்திற்கு வசனம், திரைக்கதை அமைத்தவர் மணிகண்டன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

actor-manikandan-direct-vijay-sethupathi movie
jothika lakshu

Recent Posts

‘அரசன்’ முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு

கலைப்புலி V Creations எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம்…

1 day ago

தமிழ் சினிமாவில் 50 வருட அனுபவம் கொண்டவர் பாக்யராஜ்

பிரபல இயக்குநரும், நடிகரும், திரைத்துறையின் பல்துறை கலைஞருமான கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சென்னை கிரீம்ஸ்…

1 day ago

திரைப்பட இயக்குநர் கே. பாக்யராஜ்- வாழ்க்கை வரலாறு சிறப்பு தொகுப்பு

தமிழ் சினிமாவின் “திரைக்கதையின் மன்னன்” என போற்றப்படும் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் (கிருஷ்ணசாமி பாக்யராஜ்) 1953…

1 day ago

பாரதிராஜா மறைந்து 17 நாட்களில் காலமான பாக்யராஜ்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு…

1 day ago

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமானார்

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் இன்று காலமானார்.…

1 day ago

Nightu Nila Lyric Video

Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses

2 days ago