தமிழ் சினிமாவில் மூத்த முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். இவர் உடல் நல குறைவு காரணமாக தற்போது சினிமாவில் இருந்து தள்ளி இருக்கிறார்.
ஆனால், தற்போது விஜய் ஆன்டனி நடிப்பில் உருவாகி வரும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் நடிக்கவுள்ளார் என்று தகவல் கூறப்படுகிறது.
விஜயகாந்த் நடிப்பில் இதுவரை பல சூப்பர்ஹிட் திரைப்படங்கள் உருவாகியுள்ளது. அதில் ஒன்று தான் ரமணா.
விஜயகாந்த் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார்.
இதில் முக்கிய ரோலில் யூகி சேது நடித்திருந்தார். ஆனால், அந்த ரோலில் நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் முருகதாஸின் முதல் சாய்ஸாக இருந்தது மாதவன் தானாம்.
பின், சில காரணங்களால் மாதவனால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

