நீங்கள் கேட்டவை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து வானமே எல்லை,உடன்பிறப்பு, தேவர் மகன், உழைப்பாளி, மகளிர் மட்டும்,பூவே உனக்காக, சுந்தர புருஷன், நேருக்கு நேர், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற எக்கச்சக்க படங்களில் தன் காமெடி திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.
இது மட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களின் படத்திலும் காமெடியனாக கலக்கியிருப்பார். இந்த நிலையில் தற்போது இவர் 71 வயது ஆகும் நிலையில் சென்னையில் உள்ள அடையார் வீட்டில் காலமாகியுள்ளார்.
இவரின் இறப்பு சினிமா துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திஇருக்கிறது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.