Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மதம் எப்படி போர் அடித்து விடும்? லிவிங்ஸ்டன் பேச்சால் ரசிகர்கள் கண்டனம்

actor-livingston-speech-viral

“இயக்குனர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த நடிகர் லிவிங்ஸ்டன் 1988- ஆம் ஆண்டு வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர், சொல்லாமலே, விரலுக்கேத்த வீக்கம், சுந்தர புருசன், என் புருசன் குழந்தை மாதிரி போன்ற பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் சரியான பட வாய்ப்பு இல்லாததால் சின்ன திரையில் களமிறங்கினார். நடிகர் லிவிங்ஸ்டனுக்கு திருமணம் முடிந்து இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

அதில் மூத்த மகள் ஜோவிகா சினிமாவில் நடிப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் சின்னத்திரை சீரியல் ஒன்றிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். லிவிங்ஸ்டன் குடும்பம்இந்நிலையில் நடிகர் லிவிங்ஸ்டன் நேர்காணல் ஒன்றில் தான் மதம் மாறியது தொடர்பாக பேசியுள்ளார். அதில், \”கிறிஸ்டியனாக இருந்து எனக்கு போர் அடித்து விட்டது. இதனால் நான் இந்துவாக மாறிவிட்டேன். நான் கிருஷ்ணருடைய பக்தர். அதனால் ஹரே ராமா ஹரே கிருஷ்ணாவில் நான் சேர்ந்துவிட்டேன்\” என்று கூறினார்.இதற்கு நெட்டிசன்கள் பலர் எப்படி ஒரு மதம் போர் அடித்துவிடும்? நீங்கள் உண்மையாக மதத்தை நேசிப்பவர் இல்லை என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.”,

actor-livingston-speech-viral
actor-livingston-speech-viral